ஹைக்கூ....
வெளியே புன்னகை
உள்ளே வேதனை
முதிர் கன்னி ....!
எல்லோரும் உறங்கிய பின்
அடுக்களையை உருட்டும்
தண்டச் சோறு
- பூனை
அழு குரல் சப்தம்
அன்னைக்கு சந்தோஷம்
பிரசவம்!
வெள்ளை கொக்கு
அழுக்கானது சேற்றுக்குள்
-மீன்....!
என் மகளுக்கு கல்யாணம்
எதிர் வீட்டு பையனுக்கு
என்ன நேர்ந்தது?
தாடி வளர்கிறானே.
புகார் செய்வது
எந்த காவல் நிலையதில்
இதய திருட்டு.
யாரிடம்
மனு கொடுக்க
கூட்டமாய் செல்கின்றன?
வானில் மேக
கூட்டங்கள்.
ஒளிமயமான வாழ்க்கை
தினமும் தெரிகிறது
குடிசைக்குள் நிலா
சுத்தம் சுகாதரம்
யோசனை மறக்கிறது....
மடியில் மழலையின்
சிறுநீர்!